வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சரத் பொன்சேகாவின் காணிக்கு செல்ல அனோமாவுக்கு தடை!


இராணுவ சேவைக்காக மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்கு செல்ல, அவரது உறவினர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் முகாமாக சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் கொழும்பு நாரஹென்பிட்டியில் 20 பேர்ச்சஸ் காணிப்பரப்பு சன்மானமாக வழங்கப்பட்டது.
இதனை பார்வையிடுவதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தாம் சென்ற போது, அதற்கு பொலிசார் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த காணிப்பகுதி, சரத் பொன்சேகாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டமைக்கான சகல ஆவணங்களும் தம் வசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமக்கு இந்த காணிக்குள் தம்மை அனுமதிக்க மறுப்பது, அரசாங்கத்தின் கீழ்த்தரமான அரசியலை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம், பாதுகாப்பு அமைச்சு இந்த தடை நடவடிக்கைகயை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’