வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதிய அரசமைப்பு மாற்றங்கள் டிசம்பரில் நிறைவுறும்

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிடும். இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் கூறியதாவது: " நாட்டை எதிர்வரும் ஆறு வருடங்கள் நிர்வகிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். முக்கியமாக நாங்கள் தேர்தலில் 150 ஆசனங்களை மக்களிடம் கோரினோம்.
ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையின் கீழ் வழங்க முடியுமான உச்சகட்ட ஆணையை மக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர். 30 வருட யுத்தத்தை எமது அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது.
இந்நிலையில் ஆறுவருடங்களில் நாட்டை பாரியளவில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படவுள்ளோம். முக்கியமாக அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக தேர்தல் காலத்தில் கூறப்பட்டது. அதேபோன்று தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டாலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அரசியலமைப்பில் பல மாற்றங்களை செய்வதாகவும் நாங்கள் கூறினோம். நாங்கள் கூறியதைப்போன்று அரசியலமைப்பிலும் விரைவில் மாற்றங்களை செய்யவுள்ளோம்.
செனட் சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இவ்வாறு முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. விருப்பு வாக்கு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுவிடும் என்பதனை தெரிவிக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’