ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து உரையாடுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். ஜெனரல் சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்கிமசிங்ஹ கோரியிருந்தார்
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’