யாழ்ப்பாணம் வந்துள்ள வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் இன்று பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் தோழர்களையும், ஆதரவாளர்களையும், கட்சியின் நலன் விரும்பிகளையும் சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சி கடந்தகாலத்தி;ல் சாதித்தவை குறித்தும் இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் எம்மால் சாதிக்க முடியும் எனவும் அதற்கு பக்கபலமாக உங்கள் ஒத்துழைப்பும் மக்கள் ஆதரவும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தோழர் துரைரட்ணம், கட்சியின் யாழ் பிராந்திய செயலாளரும், வேட்பாளருமான தோழர் மோகன், மற்றும் வேட்பாளர்களான அரியரட்ணம், மகாலிங்கம் (மகாமினி) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இறுதியில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தோழர்களும், ஆதரவாளர்களும் கட்சியை பலப்படுத்துவதறகு கட்சியின் கடந்த காலவரலாறு இளந்தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு எடுத்துக் கூறி விளங்கவைக்க வேண்டியது அவசியம் என கருத்துத் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’