எதிர்வரும் 2010 ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இடது சாரி விடுதலை முன்னணி தனது ஆதரவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதாகத் தெரிவித்துத்துள்ளது. அத்தோடு அக்கூட்டமைப்போடு இணைந்து செயற்படவும் அது
உத்தேசித்துள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து விலக, மூன்று காரணங்களையும் முன்னணி முன் வைத்துள்ளது :
* தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படக் கூடாது.
* மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ( இலங்கைத் தமிழரசுக் கட்சி) தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
* தமிழ் மக்களின் எதிர்கால நலன்கருதி.
இம்மூன்று காரணங்களை முன்னிட்டுத் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதெனத் தீர்மானித்துள்ளதாக முன்னணி தெரிவிக்கின்றது
மேலும் பிரிந்து நிற்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களின் நன்மை கருதி இம்முடிவை எடுக்க வேண்டும் எனவும் மட்டு. மாவட்ட இடதுசாரி முன்னணி கோரிக்கை விடுத்திருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வாக்காளப் பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் முன்னணி தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’