மட்டக்களப்பு காத்தான்குடி கலாசார மண்டபத்திற்கு முன்பாக இன்றுகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 60வயதான வயோதிபர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இவர் லொறியொன்று மோதியதன் காரணத்தினால் உயிரிழந்துள்ளார். வயோதிபரின் சடலம் காத்தான்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்து கொண்டிருந்த அவர்மீது ஜீப் வண்டியொன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த விபத்தானது மயிலுகஸ் சந்தியைச் சேர்ந்த 65வயதுடைய நந்தசேன என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் இந்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது கொழும்பு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும், குறித்த இளைஞரின் சடலத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகரகம பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி பதுளை மற்றும கிரியெல்ல ஆகிய பகுதிகளில் இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கிரியெல்ல தெவக்ர வீதியைச் சேர்ந்த சிறுமியொருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். 09வயதான ராசிலி ரசன்சிலி என்ற சிறுமி தனது வீட்டினுள் இருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார். பதுளை சூரியவத்த மாப்புகல பகுதியில் மின்னல் தாக்கி 12வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தனது வீட்டில் இருந்தபோதே இந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின்னல்தாக்கம் ஏற்படும் அபாயமுள்ளதால் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலுள்ள குளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’