மக்களது கோரிக்கைகளும் தேவைகளும் நிச்சயம் நிறைவு செய்து தரப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தி வருகின்ற மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாம் மக்களிடம் நடைமுறைச் சாத்தியமான உறுதிமொழிகளை வழங்கியிருந்ததன் பிரகாரம், நிச்சயம் மக்களது கோரிக்கைகளும் தேவைகளும் நிறைவு செய்யப்படும்.
மக்களோடு இருந்து மக்களுக்காகப் பணி செய்வதே எமது இலட்சியமும் கொள்கையுமாகுமென்ற வகையில் நிச்சயமாக உங்களின் நல்வாழ்வுக்காக உழைப்போம்.
தீவகத்தில் பொதுவாகவுள்ள குடிநீர் மின்சாரம் வீதிகள் திருத்தம் போக்குரத்து உள்ளிட்ட சகல விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
எந்தக் கட்டத்திலும் ஈ.பி.டி.பி. மக்களுடன் இரத்தமும் சதையுமாக இருக்கும் என்பதில் நீங்கள் சந்தேகப்படவோ, பயப்படவோ தேவையில்லை என்றும் அமைச்சர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆண்டு தோறும் சித்திரைப் புத்தாண்டையொட்டி புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாடடுக் கழகமும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதிப் பங்களிப்புடன் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி புங்குடுதீவில் அமைக்கப்பட்டுள்ள அம்பாள் கல்வி நிலையத்தையும் அமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டார்.
தீவகத்தில் குறிப்பாக புங்குடுதீவு வறிய மாணவர்களின் கல்விநிலை மிக மோசமாக இpருப்பதாக அமைச்சர் அவர்கள் ஏற்கனவே புங்குடுதீவிற்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கமைய வறிய மாணவர்களின் கல்வி நிலையை மேலும் விருத்தி செய்யும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதிப் பங்களிப்புடன் அம்பாள் கல்வி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு இலட்ம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்வி நிலையத்தில் தரம் 01 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையிலான கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’