வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 ஏப்ரல், 2010

தாய்லாந்தில் நேற்று நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு : 19 பேர் பலி _





தாய்லாந்தில் நேற்று நடந்த கலவரத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 14 பேர் பொது மக்கள், ஐவர் ராணுவ வீரர்கள். ஜப்பானைச் சேர்ந்த டி.வி. புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரும் பலியானார். இவர் கலவரத்தைப் படம் எடுக்க வந்தவர்.
பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அக்கட்சித் தொண்டர்கள் சிவப்பு சட்டைகளை அணிந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, நேற்று தலைநகர் பாங்காக்கில் எதிர்க்கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள்.
இருந்தும் கலவரத்தை அடக்க முடியவில்லை. இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 19 பேர் உயிரிழந்தனர்.
கலவரத்தில் சுமார் 800 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்னமும் கலவரம் ஓயவில்லை. இன்றும் தெருக்களில் ஆயிரக் கணக்கில் எதிர்க்கட்சியினர் திரண்டுள்ளனர். அவர்கள் இராணுவ வீரர்கள் சிலரை பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கலவரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசின் செய்தி தொடர்பாளர் பனிதன் வாட்டா நயகான் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’