நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த லில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருப்பதால் அவரால் நாடாளுமன் றத்துக்குச் செல்ல முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரி பால சிறிசேன நேற்றுக் கூறினார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேற்படி விடயம் தொடர்பாக செய்தியாளர் கள் கேட்டபோது தெரிவித்தவை வருமாறு:
ஜெனரல் சரத் பொன்சேகா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட் டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அவர் இப் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என் பதால் அவரால் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியும்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கைவிலங்குடன் நாடாளுமன்றிற்குச் சென்ற வரலாறு கூட இந்த நாட்டில் உண்டு.அந்த வகையில் பொன்சேகா கூட நாடாளுமன்றம் செல்ல முடியும்.
பிரதமராக யார் நியமிக்கப்படப்போகிறார் என்று அறிய அனைவரும் ஆர்வமாகவுள்ளனர். பிரதமராவதற்கான தகுதியுடையவர்கள் பலர் அரசில் உள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி இறுதித் தீர்மானம் எடுப்பார்.
அதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையையும் 35 ஆக மட்டுப்படுத்தவே அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் நாட்டுக்கு பாரமில்லாத வகையில் அரசு அமைச்சரவையை அமைக்கும் என்றார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’