மட்டக்களப்பு கல்முனை பயணிகளின் நலன்கருதி மற்றுமொரு இரவு நேர பஸ்சேவை கடந்த 15 ஆம் திகதி முதல் கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபை செயலாற்று முகாமையாளர் கே.கனகசுந்தரம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றிலிருந்து யாழ்.நகருக்கான இரவு நேர பஸ்சேவை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த மேலதிக பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் கல்முனை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு மட்டக்களப்பு - பொலநறுவை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டுச் செல்கின்றது.
மீண்டும் இந்த பஸ் யாழ்ப்பாணத்தில் இருந்து மறுநாள் மாலை 5.00 மணிக்கு கல்முனையை நோக்கிப் புறப்பட்டு செல்லும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’