ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்குக் கூடவிருப்பதாக அறிவித்திருக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் சபையில் அமரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.
முதலாவது சபை அமர்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமுகம் தந்து உரையாற்றவிருப்பதுடன் அன்றைய தினம் சபாநாயகர் தெரிவுடன் உப சபாநாயகர் குழுக்களின் செயலாளர் சபை முதல்வர் ஆகியோரின் தெரிவுகளும் இடம்பெறவிருக்கின்றன. இதனையடுத்து சபை அமர்வு ஒத்தி வைக்கப்படுமெனவம் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாவதற்குச் சமாந்தரமாக எதிர்வரும் 18 ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் இரவு முழுவதும் பிரித்ஓதும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருக்கின்றது. மறுதினம் திங்கட்கிழமை காலையில் மகா சங்கத்தினர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். இந்த வைபவங்களிலும் பங்கேற்குமாறு தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்திருக்கின்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’