வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஏப்ரல், 2010

புதிய அமைச்சு செயலாளர்களின் பெயர்கள் வெளியீடு : தமிழர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை

அமைச்சுக்களின் செயலாளர்கள் 36 பேர், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினால் நேற்று நியமிக்கப்பட்டனர். எனினும் இதில் எந்த ஒரு தமிழரும் இடம்பெறவில்லை.
இதன்படி, தாரா விஜயதிலக்க, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும்


பீ.பி. ஜெயசுந்தர - பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

டபில்யு பி. கணேகல - ஊடகத்துறை அமைச்சு

மல்காந்தி விக்ரமசிங்க - தேசிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு

சுகத் கம்லத் - நீதி அமைச்சு

எம்.சீ.பர்ணான்டோ - மின்சார சக்திவள அமைச்சு

மகிந்த மடிஹஹேவா - தொழில் உறவுகள் அபிவிருத்தி மேம்பாடு அமைச்சு

திலக்கொலுரே - சிறுகைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சு

ஏ.எப்.கமகே - கால்நடை வள அமைச்சு

கோட்டாபய ராஜபக்ஷ - பாதுகாப்பு அமைச்சு

எல்.லியனகம - விளையாட்டுத்துறை அமைச்சு

அசோக பீரிஷ் - காணி அபிவிருத்தி அமைச்சு

வீ. திஸநாயக்க - புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சு

நிஷ்ஷங்க விஜேரத்ன - வீடமைப்பு மற்றும் கட்டிடத்துறை அமைச்சு

சீதா விதான ஆராய்ச்சி - நாடாளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சு

ஆர்.ஏ.டீ.ஆர்.மாலினி பீரிஸ் - பெருந்தோட்டத்துறை அமைச்சு

ஐவன் த சில்வா - நீர் வடிகால் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சு

கே.வி.பி. ரஞ்சன் சில்வா - துறைமுகம் மற்றும் வானூர்தி சேவை அமைச்சு

எல்.அபேகுணசேகர - நீர்வள மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சு

அட்மிரால் வசந்த கருணாகொட - பெருந்தெருக்கள் அமைச்சு

பி.டபில்யு.சி. ஜயதிலக்க - அஞ்சல்துறை அமைச்சு

விமல் ரூபசிங்க - தேசிய உரிமை மற்றும் கலாசார அமைச்சு

அசோக ஜெயசேகர - புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு

பேராசியர் தமிதா டி சொய்சா - மீன் பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சு

ஆர்.எச்.எஸ். சமரதுங்க - சுற்றாடல் துறை அமைச்சு

வீ. டீ. தஹநாயக்க - தேசிய வைத்திய அமைச்சு

டபில்யு. யமுனா சதுரங்கனி - சமூக சேவைகள் அமைச்சு

என்.ஆர். குணசேகர - சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் நடவடிக்கைகள் அமைச்சு

டீ.ஆர்.சி. ரூபரோ - சுகாதார அமைச்சு

எச்.எச்.ஹேவாபத்திரன - இளைஞர் நடவடிக்கைகள் அமைச்சு

எச்.டீ.எம்.ஜெயவர்தன - கனிய எண்ணெய் நடவடிக்கைள் அமைச்சு

நிஹால் ஜெயதிலக்க - மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சு

அனுரசிறிவர்தன - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சு

டபில்யு.டபில்யு.கமகே - அரச வள மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு

எஸ்.மர்னா மொஹமட் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

பீ.பி. அபேகோன் - அரச முகாமை மீளமைப்பு

ஆகிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’