ஐபிஎல் போட்டிகளின் இடைக்கால தலைவராக சிரையூஅமின் நியமிக்கப்பட்டுள்ளார் .ஐபிஎல் போட்டிகளில் சுமார் 22 ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் மோடி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்தே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மும்பையில் பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்தில் ஐ.பி.எல் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று காலையில் கூடியது. பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்மனோகர் , துணை தலைவர் அருண்ஜெட்லி, செயலர் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் ராஜீவ்சுக்லா, ஐ.பி.எல் உபதலைவர் நிரஞ்சன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐ.பி.எல் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை , ஐ.பி.எல் ஒரு முக்கியமான சொத்து. மோடி விவகாரம் கண்காணித்து வரப்படுகிறது. தவிர ஐபிஎல் இடைக்கால தலைவராக சிரையூஅமின் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவிசாஸ்தி உள்ளிட்ட 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பி.சி.சி.ஐ கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என பி.சி.சி.ஐ தலைவர் சஷாங்மனோகர் மோடியின் இடைக்கால தடை உத்தரவினைத் தொடர்ந்து அவர் மீதான விசாரனைகளை மேற்கொள்ள செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மோடி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுமார் 6 மாதங்கள் எடுக்கும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.
மோடியின் பதவி தொடர்பில் நடத்த்ப்படும் வாக்குக் கணக்கெடுப்பில் 4இல் 3 வாக்குகளை பிசிசிஐ பெற வேண்டும் இல்லாவிடின் மோடியை பதவி நீக்க முடியாது. இதேவேளை தனது இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசிதரூர் பதவிக்கு உலை வைத்த ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை பதவியில் இருந்து நீக்கிட சட்ட ரீதியான பிரச்னைகளை எப்படி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கையாளப்போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’