ஜெனரல் சரத் பொன்செகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் விடுக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் தடுப்பு காவலில் உள்ள ஜெனரல் பொன்சேகாவை, அழைத்து வந்து அமர்வுகளில் பங்கேற்கச் செய்து மீண்டும் தடுப்பு காவலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்குத் தடையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் அமர்வுகளில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியின் தலைவர் என்ற ரீதியில் பொன்சேகாவுக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’