பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால் தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்ட பற்றி சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தம் கிடையாது என்றார்.
பார்வதி அம்மாள் சென்னை வருகை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால் தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’