எமது மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் உறுதியுடன் உழைக்கும் எமக்கு எமது மக்கள் பெற்றுத்தந்த வெற்றியானது எமது மக்களின் வெற்றியே ஆகும் என்றும் அதற்காக தாம் தமக்கு வாக்களித்த மக்களின் விழிப்புணர்வைப் பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிரணியினரின் ஊடகங்கள் திட்டமிட்டு நடத்தியிருந்த அவதூறுகளும் உண்மைகளை மறைத்து பொய்களை மட்டும் பரப்பும் சூழ்ச்சிகளும் தூற்றல்களும் சவால்களாக இருந்தபோதிலும் அவற்றை எதிர்கொண்டு ஜனநாயக தேர்தல் களத்தில் தாம் பெற்றிருக்கும் வெற்றியானது தமக்கு தனிப்பெரும் அரசியல் பலத்தை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டு மக்களுக்காக தாம் ஆற்றிய அர்ப்பணங்களை இனிவரும் காலங்களில் மூன்று ஆசனங்களைக் கொண்ட பலத்தோடு முன்னெடுக்க இருப்பது மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் எதிர்வரும் காலத்தில் தமது அரசியல் பலம் இன்னமும் அதிகரித்துச் செல்லவும் அடையவேண்டிய அரசியல் இலக்கை விரைவாக எட்டும் சூழ்நிலையை இனிவரும் தருணங்களில் தமக்கு வழங்குவதற்கும் மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’