வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஏப்ரல், 2010

நித்யானந்தாவை காட்டிக்கொடுத்த சிம் கார்டு

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் தியானபீட ஆசிரம தலைவராக இருந்தவர், நித்யானந்தா. 32 வயதான நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள், கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சி.டி.யை வெளியிட்ட நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின் கருப்பன் சென்னை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனக்கு நித்யானந்தா கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். சென்னை போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
நித்யானந்தா மீதான புகார் தொடர்பான சம்பவங்கள் நடந்த இடம் பெங்களூர் என்பதால், வழக்கு ஆவணங்கள் கர்நாடக போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆசிரமம் அமைந்துள்ள பிடதி போலீசார் நித்யானந்தாவுக்கு எதிராக மறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் மீது கற்பழிப்பு, மோசடி, மிரட்டல், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், நடிகையுடன் இருந்த சி.டி. வெளியானதில் இருந்தே, கடந்த 1 1/2 மாதங்களாக நித்யானந்தா தலைமறைவாகிவிட்டார். அவர் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்க சென்று இருப்பதாக தியானபீடம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில், தான் சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்றும், விரைவில் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாகவும், வீடியோ சி.டி. மூலம் நித்யானந்தா கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து ஆசிரமத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக நித்யானந்தா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
சமீபத்தில் பெங்களூர் சி.ஐ.டி போலீசார் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். அப்போது சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். நேற்று முன்தினமும் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சி.ஐ.டி. போலீசார் சென்று, அங்குள்ள ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் அறைகள், அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தினர். இந்த சோதனையின்போது கம்ப்ழூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு இருந்த சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
இந்த நிலையில், இமாசலபிரதேச மாநிலத்தில், சோலன் மாவட்டம் அக்ரி கிராமத்தில் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் நித்யானந்தா தலைமறைவாக இருப்பதாக, சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சி.ஐ.டி. போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று சோலன் மாவட்ட போலீசார் உதவியுடன் நேற்று மதியம் 1.30 மணிக்கு நித்யானந்தாவை கைது செய்தனர். அவருடன் இருந்த நித்திய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டி, மிதா சனாதன் நந்தா, அர்பில் சங்கில், அருண்ராஜ் ஆகிய 4 சீடர்களையும் போலீசார் கைது செய்தார்கள்.
நித்யானந்தாவை போலீசார் கைது செய்தபோது அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.3 லட்சம் ), 3 வீடியோ கேமராக்கள் மற்றும் 3 லேப் டாப் கம்ப்ழூட்டர்களும் கைப்பற்றப்பட்டன.
இமாசலபிரதேச டெலிபோன் சிம் கார்டு மூலம் அவர்கள் அங்கு தங்கி இருந்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரின் பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
கைதான நித்யானந்தா மற்றும் அவருடைய சீடர்கள் 4 பேரையும் சிம்லாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு அனுமதி பெற்று, பிடதியில் நித்யானந்தா மீது பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்குள் விமானம் மூலம் நித்யானந்தா பெங்களூர் அழைத்து வரப்படுகிறார்.
பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி குருபிரசாத் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’