உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 75 லட்ச ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வர முயற்சித்த வேளையில் சுங்கப் பிரிவினர் அவற்றை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பயணிகளின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து பொருட்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து குறித்த வகை கையடக்கத் தொலைபேசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுமார் 2000 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த கையடக்கத் தொலைபேசிகளுக்கு எவரும் உரிமை கோராத காரணத்தினால் பொருட்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’