வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஏப்ரல், 2010

இன்று நாடாளுமன்றுக்கு வருகின்றார் பொன்சேகா

இராணுவக் காவலில் இருந்தபடியே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா நீண்ட இழுபறியின் பின் னர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு எதுவித தடையுமில்லை எனத் தெரிவித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம் மிக்க கித்துல்கொடவுக்கு நேற்றுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பொன்சேகா இன்று காலை இராணுவப் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத் துவரப்படுவார் என்று பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அக்கடிதத்தில் மேலும் குறிப் பிட்டுள்ளார். பொன்சேகா நாடாளுமன்றம் செல்வ தற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித் துல்கொட நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
தம்மிக்க கித்துல்கொடவின் இந்த வேண்டுகோளையடுத்தே பொன்சேகா நாடாளுமன்றம் செல்வதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு கோரி பொன்சேகாவின் கட்சி கடந்த வாரம் இராணுவத் தளபதிக்கும், நாடாளு மன்றப் பதில் செயலாளர் நாயகத்திற்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’