வவுனியா திருநாவுக்குளம் பிரதேசத்தில் கடந்த 20 ம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகத்துக்குரியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை வவுனியா காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று காவல்துறையினரால் சம்பவம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இதன்போது ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் இடம்மொன்றை காட்டுவதாக கூறி காவல்துறையினரை அழைந்து சென்ற குறித்த நபர், தப்பித்துச் செல்வதற்காக கல்மடு குளத்தில் குதித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று முன்நிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 20 ம் திகதி கொள்ளை முயற்சியொன்றின் போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தனுஜா என்ற சிறுமி கொல்லப்பட்டார்.
சம்பவத்தின் போது சிறுமியின் தாயாரான ஆசிரியை கத்திக்குத்துக்கு உள்ளாகிய நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்தநிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியாவில் இடம்பெற்ற முக்கிய கொலைச் சம்பவங்களில் தொடர்புபட்டவர்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’