மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற புளியந்தீவு, ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் பிரதான அங்கமான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தந்திருந்தனர்.
ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவானது கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தினமும் மூலமூர்த்திக்கு அபிஷேகமும் விசேட பூஜைகளும் தினமும் நடைபெற்று வந்ததுடன் இன்று மாம்பழத் திருவிழாவும் வேட்டைத் திருவிழாவும் நடைபெற்றன.
மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நாளை 28 ஆம் திகதி மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கரையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’