ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலிமுகத்திடலுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதன் பின்னரே அவர் திடீரென காலிமுகத்திடலுக்கும் விஜயம் செய்தார்.
புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக காலிமுகத்திடலுக்கு நேற்று மாலை சென்றிருந்தவர்கள் ஜனாதிபதியை கண்டதும் திகைத்து நின்றதுடன் சந்தோஷத்தில் ஜனாதிபதிக்கு அருகில் செல்வதற்கு பலரும் முயற்சித்தனர்.
காலிமுகத்திடலிலிருந்த மக்கள் திரண்டு சென்று ஜனாதிபதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு முயற்சித்த போதிலும் சிலருக்கு மட்டுமே அதற்கான சந்தர்ப்பம் கிட்டியது.
காலிமுகத்திடலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் மக்களுடன் சில நிமிடங்களை கழித்த ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பிரியாத் பந்து விக்ரம ஆகியோரும் சென்றிருந்தனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’