இலங்கையில் சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலும், இலங்கையிலும் தற்போதும் யுத்தம் குறைவடைந்து சுமுக நிலை தோன்றி வருகிறது.
இந்த நிலையில் அவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் போது, இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அகதி அந்தஸ்து வழங்கல் தொடர்பிலான கொள்கை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முழு கொள்கையும் மாற்றி அமைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நிரபராதியான அகதிகள் என அடையாளம் காணப்படாத பட்சத்தில், அவர்களின் அந்தஸ்து மனு நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. அண்மையிலேயே இலங்கையில் பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டது.
இலங்கையின் உச்சியில் உள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபிரதேசங்கள் தற்போது மீட்சி கண்டு வருகின்றன.
எனினும் நாட்டின் ஏனைய பாகங்கள் இயல்பு நிலையில் காணப்படுகின்றன.
எனவே இலங்கை அகதிகளுக்கு அந்தஸ்து வழங்கும் போது அவர்கள் வரும் பிரதேசங்கள் தொடர்பிலும் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’