ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி மகேஸ்வரன் கொழும்பில் ஆலய வழிபாட்டில் இருந்தபோது
சுட்டுக்கொல்லப்பட்டார். ஏற்கனவே ஒருதடவை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து
துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மனேஸ்வரன் உயிர்தப்பியவர். அதில் புலி உறுப்பினர்
நியூட்டன் சம்பந்தப்பட்டிருந்தார் என்று கொழும்பிலிருந்து செய்திகள் வெளிவந்தன.
இரண்டாவது முயற்சியில் மகேஸ்வரன் கொல்லப்பட்டார். மகேஸ்வரனைக் கொன்றவர்
ஈபிடிபி உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப்பாதுகாவலர் என்றும்
செய்திகள் வெளிவந்தன. மகேஸ்வரனைச் சுட்டுக் கொன்றவர் ஈ.பி.டி.பி உறுப்பினருமல்
ல. டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப்பாதுகாவலருமல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கொலையாளி குருநகரைச் சேர்ந்த வசந்தன் என்றழைக்கப்படும் கொலின் வலன்ரைன்
என்ற புலிகளின் புலனாய்வு உறுப்பினர். வன்னியில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு
கொலைகள் செய்வதற்காக புலிகளால் கொழும்பிற்கு அனுப்பப்பட்டவர். மகேஸ்வரனுக்
கு நெருக்கமாகவும் இருந்தவர். மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கியால் சுடும்போது வசந்
தன் சுடாதே என்று சத்தமிட்டதாக ஆலயத்தில் நின்றவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பொலிஸார் சுட்டதில் கொலையாளி காயமடைந்து கைது செய்யப்பட்டிருக்காவிட்டால்
மகேஸ்வரனின் கொலைப்பழியை ஈபிடிபியினரே இன்றுவரை சுமக்க வேண்டியிருந்திருக்
கும். மகேஸ்வரனைக் கொன்றவர்கள் ஈபிடிபியினர் என்று கூப்பாடு போட்டவர்கள்
கொலையாளி புலி உறுப்பினர் என்று தெரிந்தவுடன் மௌனமாகிவிடட்டார்கள்.
கொலையாளி புலி என்று தெரிந்தவுடன் கொலையை நேரில் கண்டவர்கள் யாரும் சாட்சி
சொல்ல முன்வரவில்லை.
அதுபோலத்ததான் இந்த சாவகச்சேரியைச் சேர்ந்த கபில்நாத் என்ற 16 வயது மாணவன்
கொலையும் ஈபிடிபி கட்சியினர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. கொல்லப்பட்ட
கபில்நாத் மூன்று கோடி ரூபா கப்பம் கேட்டுக் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது பாடசாலை நண்பர்களால் கடத்தப்பட்ட அன்றே பணம் கேட்டு எந்தவித
பேரமும் பேசாமல் கொல்லப்பட்டு வளவில் புதைக்கப்பட்டிருக்கிறார். சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்ட கபில்நாத்தின் நண்பனின் செல்த் தொலைபேசியில் தேடப்படும் சந்
தேக நபரான ஜீவன் என்பவரின் தொலைபேசி இலக்கம் கண்டுபிடிக்கப்பட்டு அதன்
பேரில் ஜீவன் என்ற சந்தேக நபர் தேடப்படுகிறார். ஆனால் பொலிஸாராலே அல்லது
நீதிமன்றத்தாலோ கொலையாளி ஈபிடிபி உறுப்பினர் என்று குறிப்பிடப்படவில்லை என்று
பொலிஸ் அத்தியட்சகரின் கையொப்பமிட்ட அறிக்கையை ஈபிடிபியினர் வெளியிட்டிருந்
தனர்.
உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்
பாளர்.
இவர் சவ்றா என்ற பைனான்ஸ் கொம்பனி ஒன்றை நடத்தியதன் பல தமிழர்களன் கோடிக்
கணக்கான பணத்தை மோசடி செய்தவர். இவருடைய பைனான்ஸ் கொம்பனியில் தன்
னடைய மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை வைப்புச் செய்து
அதனை சரவணபவானிடம் இழந்ததனால் அந்தத் தந்தையார் தற்கொலை செய்துகொண்
டார். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மோசடிப் பேர்வழி சாவகச்சேரிக் கொலையை தனது
அரசியல் நோக்கத்திற்காக தனது சொந்தப் பத்திரிகையில் ஈபிடிபியினரைச் சம்பந்தப்படுத்
தி செய்தியை வெளியிட்டிருந்தார். உதயன்.சுடரொளி பத்திரிகையில் வந்த செய்
தியையே உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஊடகங்களும் இணையத்தளங்களும் திரித்
து வெளியிட்டு பலம் பெயர் தமிழர்களை நம்பவைத்தன.
இந்த சிறுவன் கபில்நாத்தின் கொலை கண்டிக்கப்படவேண்டியதொன்று. போர்ச் சூழலும்
வெடிகுண்டு ஓசைகளுக்கும் முற்றப்பள்ளி வைக்கப்பட்டு மக்கள் இனி உயிர்ப்பயமின்றி
நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையில் வாழத் தொடங்கியபோது இந்தக் கொலை
மக்களுக்கு பேரதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்
பாதுகாப்பையிட்டு மேலும் அச்சம் கொள்ளவேண்டிய நிலையையே இந்தக் கொலை எற்
படுத்தியுள்ளது. உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்படவேண்டும். அது யாராக
இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கப்படவேண்டும்.
இனிமேலும் இப்படியான கொலைகள் நடைபெறாதவகையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்
ளப்படவேண்டும்.
இருந்தாலும் இந்தக் கொலையைக் கண்டித்தும் இந்தக் கொலைக்கு முக்கியத்
துவம் கொடுத்தும் செய்திகள் வெளியிடுபவர்கள் யார்? அவர்களுக்குள்ள
தகுதிகள் என்னவென்பதையும் ஆராயவேண்டிய அவசியமிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’