வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

இராணுவ உதவிகள் தொடரும்; இலங்கைக்கு பாகிஸ்தான் உறுதி

இலங்கைக்குத் தேவையான இராணுவ உதவிகளைப் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வழங்கும் என்றும் இலங்கையின் விமா னப்படைக்குத் தேவையான பயிற்சிகளும், உதிரிப்பாகங்களும் வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுப் பிரதமர் உறுதி அளித்திருக் கிறார்.

"சார்க்' உச்சி மாநாடு இடம்பெறும் பூட் டானில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தவேளை, பாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியை பாகிஸ்தா னுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மீண் டும் அழைப்பு விடுத்துள்ள அவர், மிகக் கடினமான தருணத்தில் இலங்கைக் கிரிக் கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி யமைக்காக நன்றி தெரிவித்துள்ளதுடன், அங்கு இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம் பவத்திற்கு கவலையும் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப் பின்போது பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையுடன் பாரம்பரியமாக , நெருக் கமாக பரஸ்பர உதவியுடன் இருந்துவரும் உறவை பாகிஸ்தான் பெரிதும் மதிக்கின்றது.
மிகக் கடினமான தருணங்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றைய நாட்டிற்கு உதவியாக நின்றுள்ளன.
பரஸ்பர அக்கறையுடைய விடயங்களில் இரு நாடுகளுக்கும் பொதுவான கருத்துள் ளது.
நாம் எமது நிலையை பிராந்திய, சர்வதேச மன்றுகளில் மேலும் நெருக்கமாக ஒருங்கி ணைக்கவேண்டும். பயங்கரவாதத்தைத்
தோற்கடித்தமை குறித்து மகிழ்ச்சி
இலங்கைப் பயங்கரவாதத்தை தோற் கடித்தமை குறித்து பாகிஸ்தான் மகிழ்ச்சிய டைந்துள்ளது. பயங்கரவாதத்தைத் தோற் கடிப்பதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.
பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக கடும் சவால்களை எதிர்கொள்கின்ற போதி லும் இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் பங்களிப்புச் செய்யும்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச் சாத்தான பின்னர் கடந்த நான்கு வருடங் களில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த் தகத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
எனினும், எமது வர்த்தக உறவுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு இணைந்து பாடு படவேண்டும்.
பாகிஸ்தான் இலங்கைக்குத் தொடர்ந் தும் இராணுவப் பயிற்சிகளை வழங்கும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய் யும்.
இலங்கை விமானப்படைக்கான விமா னங்களின் இயந்திரங்கள், உபகரணங் களையும் வழங்கும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’