வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

வடமராட்சியில் இளம்பெண் கடத்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடிப் பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி தெரிய வருகையில்
கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை பொலிகண்டியை சேர்ந்த 24வயதுடைய இனம்பெண்ணொருவர் துன்னாலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றிருக்கின்றார். அப்போது வெள்ளைவானில் சென்ற சிலர் பெண்ணை மிதிவண்டியுடன் கடத்திச் சென்று அவரை கொல்வதற்காக கழுத்தை நெரித்திருக்கின்றனர். சற்றுநேரத்தில் குறித்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய கடத்தல்காரர்கள் அவரை அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பெண் மறுநாள் காலையில் அருகிலுள்ள வீட்டிற்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இளம்பெண்ணை விசாரணை செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் கரவெட்டி இராஜகிராமத்தில் உள்ள வீடு ஒன்றை அதிகாலை 4.00மணிக்கு சுற்றிவளைத்தனர் அங்கு பெண்ணின் சைக்கிளும் அவரது நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அங்கிருந்து இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் விசாரணை செய்த பின்னர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை நீதவான் திருமதி ஜோய் மகாதேவா சந்தேகநபர்கள் இருவரையும் அடுத்தமாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாரைப் பணித்துள்ளார் என மேலும் தெரியவருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’