வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஏப்ரல், 2010

ரம்பா – இந்திரன் கல்யாணம் விமரிசையாக முடிந்த்து

பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் இன்று (வியாழக்கிழமை) திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் விமரிசையாக திருமணம் முடிந்த்து.

இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் திருமணம் நடந்த்து. அலங்காரத்துடன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார் ரம்பா. பின்னர் மணமகள் சடங்கு நடந்த்து. அதன் பின்னர் மணமகன் இந்திரன் அழைத்து வரப்பட்டார்.
இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடந்தன.
திருமணத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ரம்பா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து வருகிற 11ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகினர் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’