வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஏப்ரல், 2010

ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து கொல்கத்தா ரசிகர்களை குஷிப்படுத்திய சமீரா!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உற்சாகமூட்டும் வேலையை விரும்பி ஏற்றுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
ஐபிஎல் போட்டிகளில் அணிகள் விளையாடும்போது வீரர்களையும் பார்வையாளர்களையும் உற்சாகமூட்டும் வேலையை நடிகர் நடிகைகள் செய்து வருகிறார்கள்.
சென்னையில் டோணியின் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியபோது, வீரர்களை உற்சாகமூட்டினார் நடிகை த்ரிஷா. 
இப்போது கொல்கத்தா அணி வீரர்களை குஷிப்படுத்தும் வேலையை விரும்பி ஏற்றுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. நேற்று டெல்லி அணியுடன் மோதியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண பெங்களூரிலிருந்து வந்திருந்தார் சமீரா ரெட்டி. கிரிக்கெட் ஆட்டத்தைக் காட்டியதற்கு சமமாக சமீராவையும் காட்டிக் கொண்டே இருந்தன டெலிவிஷன் சேனல்கள். அவரும் சளைக்காமல் உற்சாக போஸ் கொடுத்தார். முத்தங்களைப் பறக்க விட்டார். கைகளை ஆட்டி, ஆர்வக் குரல் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
அவர் வந்த நேரம், கொல்கத்தா அணி மிகவும் கஷ்டமான ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. திறமையை விட அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் விளையாட்டு கிரிக்கெட் அல்லவா... உடனே, சமீரா வந்த நேரம் ஜெயிச்சுட்டோம் என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்!
இதுகுறித்து சமீரா கூறுகையில், "எனக்கு ஷாரூக்கானை ரொம்பப் பிடிக்கும். அவருடைய அணி என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸை மிகவும் பிடிக்கும். மற்றபடி கிரிக்கெட் பற்றியோ, ட்வெண்டி 20 மேட்ச் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த ரசிகர் கூட்டம், அவர்களின் உற்சாகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது..." என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’