வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் திணைக்களத்தில் தாம் இருப்பதாகவும், இதனை தெரிந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளரைக் காணவில்லை என சில ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும், இது உண்மைக்குப் புறம்பான செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் தேர்தல் ஆணையாளரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்மை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’