வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் டியூ குணசேகர


புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கப் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன் சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பொலிஸ் நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர் முதியோர் பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும்.
நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எனக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எனக்கு உணவு வந்தது.
ஆகவே சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்று அமைச்சர் டி.யு. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’