யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் அங்கயன் குழுவினரே தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் மாநகரசபையில் நேற்றைய தினம் (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் (அதாவது நேற்றைய தினம் 01) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.யாழ் மாநகரசபையில் நேற்றைய தினம் (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ராமநாதன் அங்கயன் குழுவினர் தன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அதேவேளை, தனது கணவர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் யோகேஸ்வரி பற்குணராஜா குறிப்பிட்டார்.
இதன்போது தனது வாகனக் கண்ணாடிகள் அடித்து சேதமாக்கப்பட்டதாகவும் எனது தலை முடியைப் பிடித்து வெளியே இழுத்த இராமநாதன் தங்களுடைய வாகனத்தில் என்னை ஏற்ற முயன்றார். அவர்களின் பிடியிலிருந்து தப்பியோடிச் சென்ற நான் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்தவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தகவல் கொடுத்தேன்.
உடனடியாக அமைச்சர் அவர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அதன் பின்னர் அங்கிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். தங்கள் வாகனத்தைத் தாங்களே பிஸ்டலால் சுட்டுவிட்டுத் தீயிட்ட அங்கஜனின் குழுவினர் அதன் பின்னரே அங்கிருந்து தப்பியோடினர்.
இதன் பின்னர் நான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’