தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திகளை கவனிக்கும் அமைச்சு கிடைக்காததால்தான் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை அரசில் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது.
அவருக்கு கால்நடை அபிவிருத்து அமைச்சு மட்டுமே இம்முறை கொடுக்கப்பட்டது என்றும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது கட்சி இல்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.இந்த விடயத்தை தமது தரப்பு ஜனாதிபதியிடம் முன்னரே தெரிவித்ததாகவும், அதை அடுத்தே வெள்ளிக்கிழமையன்று தொண்டமானுக்கு அமைச்சர் பதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.
மலையகம் வாழ் மக்களின் அபிவிருத்திகளுக்கான சில துறைகளை ஒன்றிணைத்து ஒரு அமைச்சு வழங்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
![]() | ![]() |
முத்து சிவலிங்கம் |
கடந்த நாடாளுமன்றத்தை விட தற்போது இலங்கை தொழிலாளர் கட்சிக்கு குறைவான உறுப்பினர்களே இருந்தாலும் தமது பேரம் பேசும் திறன் குறைந்துவிடவில்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் மலையக மக்களை தமது கட்சி சார்ந்துள்ளதால் அரசு தம்மை ஒதுக்கி விடமுடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.
![]() | ![]() ![]() |
மலையகப் பகுதியில் தமது கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பதாகவும் அதன் காரணமாக தங்களை யாரும் சுலமபாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
நடப்பு நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பதே காரணம் எனவும் கூறும் அவர், அது தமது அடித்தளத்தை பாதிக்காது என்றும் கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’