வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 ஏப்ரல், 2010

எழுத்துமூல அழைப்பு கிடைத்தால் அரசுடன் பேசத் தயார் : மாவை சேனாதிராஜா

அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூலமான அழைப்பு கிடைக்குமானால் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர்  இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வினை எதிர்பார்ப்பதாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற முதல் அமர்வில் கூறிய கருத்தினை அரசாங்கம் வரவேற்றிருந்தது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கிடைத்த நல்லதொரு சமிக்ஞை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்ததுடன் சார்க் மாநாட்டின் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இது ஏற்கனவே பேசப்பட்ட விடயம். எனினும் இதுவரை எமக்கு அழைப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு எழுத்துமூலமான அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் எமது அரசியல் குழு அது தொடர்பில் ஆராய்ந்து பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யும்" என அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’