வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

யாழ் குடாநாட்டில் நடக்கும் கொடிய சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

யாழ் குடாநாட்டில் அசாதாரணச் சூழ்நிலை படிப்படியாக நீங்கியுள்ள நிலையில் மீண்டும் ஆட்கடத்தல் கப்பம் கோருதல் கொலை பாலியல் ரீதியிலான வல்லுறவுகள் போன்ற சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒளிமயமானதோர் எதிர்காலத்தை நோக்கி எமது மக்கள் அணிதிரண்டு வரும் சந்தர்ப்பத்தில் மேற்படி சம்பவங்கள் எமது மக்களை மீண்டும் கடந்த கால நிலை குறித்த ஞாபகங்களுக்கும் அச்சத்திற்கும் இட்டுச் செல்வதாக அமைந்து வருவதால் இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்நிலையில் பொதுமக்களும் முன்வந்து பொலிஸாருக்கு உதவி இவ்வாறான சம்பவங்கள் வளராமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடத்தப்படுகின்ற நபர்கள் என்ன காரணங்களுக்காக கடத்தப்படுகின்றார்கள் என்ற விடயம் உறுதியாக தெரியவராத நிலையில் மக்கள் அனைவரும் விழிப்பாக இருப்பதன் மூலமும் பொலிஸாருக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலமும் இவ்வாறான கொடிய சம்பவங்களை எமது சமூகத்தில் வளர விடாது தடுக்க முடியும் என்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’