ஹட்டன் கொட்டகலை வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 13 வயது மாணவி ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடைகள் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹட்டன் மனித உரிமைகள் தாபனம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தது.
அவரது உடைகள் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹட்டன் மனித உரிமைகள் தாபனம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தது.
கடந்த 5ஆம் திகதி பாடசாலையிலிருந்து வரும் வழியில், முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோர் மாணவியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஸ்டொனிகிளிப் தோட்டத்தின் காட்டுப் பகுதியிலிருந்து மாணவியின் ஆடைகளும் புத்தகங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் இந்த மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் மனித உரிமைகள் தாபனத்திலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பார்வதி நலன்புரி நிலையத்தில் 13 வயது மாணவன் ஒருவனை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. குறித்த சிறுவனை கடத்திச் செல்வதற்கு ஓர் கும்பல் முயற்சித்த போதிலும், கும்பலிடமிருந்து சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலவந்தமாக வான் ஒன்றில் ஏற்றிச் செல்ல மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுவன் சத்தமிட்டதன் காரணமாக கடத்தல்காரர்கள் சிறுவனை விட்டுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த வானில் மேலும் சில சிறுவர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என யாழ்ப்பாண பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக்காலமாக கடத்தல்கள், கப்பம் கோரல், பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நவாலியில் கப்பம் கோரி இருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதவர்களால் இந்த இருவரும் வாகனங்களின் மூலம் நேற்று கடத்திச்செல்லப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.இந்தநிலையில் இவர்கள் இருவரையும் விடுவிக்க கடத்தல்காரர்கள் ஐந்து மில்லியன் ரூபாய்களை கோருவதாகவும் அவர்கள் அதற்காக பல கையடக்க தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடத்தப்பட்டவர்களில் ஒருவர், மோட்டார் திருத்துனரான நவாலியை சேர்ந்த வரதராஜசிங்கம் மகேஸ்வரன் என்றும் மற்றையவர் மின்சார மின்பொறியியலாளரான சிவராசா மகேந்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களான இவர்கள் இருவரும் நவாலியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்ற போதே கடத்தப்பட்டுள்ளனர்.
அண்மையிலும் கப்பம் கோரி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டபோதும் அவர் தொடர்பான தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’