வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

அம்பாரை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும் என்பதை உறுதிப் படுத்திய காரைதீவு கிராம மக்கள்





கிழக்கு மாகாண முதலமைச்சரையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களையும் இன்று காரைதீவு மக்கள் ஒன்று திரண்டு வரவேற்றனர். காரைதீவுக் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆலயம் ஊடாக முதலமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டார்.
வேண்ட் வாத்தியங்கள் முழங்க விவேகானந்தா மணிமண்டபம் ஊhடாக பிரதேச செயலகம்வரை இவ்வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. ஆங்காங்கே மாலையுடன் காத்திருநத மக்கள் கூட்டம் முதலமைச்சரையும் தலைமை வேட்பாளர் சத்திய சீலன் உள்ளிட்ட அனைத்து வேடட்பாளர்களையும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அம்பாறை மாவட்டத்திலே கருணா குழுவின் இனிய பாரதியும் அவரோடு சேர்ந்தவர்களும் இனிய ( பாரதி அரசாங்கத்தின் ஒரு வேட்பாளர்) தமிழர்கள் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கிராமத்தின் தலைவர்கள், சங்கங்கள் மன்றங்களின் தலைவர்கள், நிரவாகத்தினரை நாள் தோறும் வற்புறுத்தி வருகின்றனர்.

அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவைகளுக்கும் அப்பால் காரைதீவு மக்கள் முதலமைச்சரை பாரிய வரவேட்புகளுக்கு மத்தியில் வரவேற்றதானது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவம் காப்பாற்றப்படும் என்பது உறுதியாகின்றது. கிழக்கின் அபிவிருத்திக்காக முதலமைச்சரின் கரங்களை அம்பாரை மாவட்ட தமிழ் மக்களும் பலப்படுத்துவார்கள் என்பது உறுதியாகின்றது.

தொடர்நது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சத்தியசீலன் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வெற்றி உறுதி செய்யும். அதற்கு இந்த கிராமத்து மக்கள் எனக்கு அளித்திருக்கின்ற உத்தரவாதம் சான்று பகர்கின்றது எனக் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’