சானியா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என தான் குறிப்பிட்ட செய்தியை பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் திலாவர் அபாஸ் திடீரென மறுத்துள்ளார்.
சோயப் மாலிக்கை கைப்பிடிக்க உள்ள சானியா மிர்சா திருமணத்துக்கு பின் ஆசிய பாரம்பரியத்தை பின்பற்றி தனது கணவர் நாடான பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் தவிர சானியா இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்தால், தனது கணவர் நாடான பாகிஸ்தான் பெண்கள் மத்தியில் டென்னிசை வளர்க்க சானியா உதவ வேண்டும் என பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் திலாவர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆசிய பெண்கள் தங்களது கணவரை பின்பற்றுவது தான் பாரம்பரியம். எனவே, விரைவில் பாகிஸ்தான் குடியுரிமை பெற்று சானியா எங்கள் நாட்டுக்காக விளையாடலாம். டென்னிஸ் விளையாட்டை தேர்வு செய்யும்படி இங்குள்ள இளம் வீராங்கனைகளை வலியுறுத்தலாம்.
கலப்பு இரட்டையர் போட்டிகளில் பாகிஸ்தானின்முதலாமிடத்தில் உள்ள வீரரான அய்சாம்-ஹக்-குரேஷியுடன் சேர்ந்து சானியா பங்கேற்கலாம். இவர்கள் இணைந்து விளையாடினால், சர்வதேச அளவில் மிகப் பெரும் சாதனைகள் படைக்கலாம் எனவும் திலாவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் வேண்டுகோளை இந்திய டென்னிஸ் சங்கம் நிராகரித்ததுள்ளது.ஷொய்ப் மலிக்கை திருமணம் முடித்த பின்பும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட இருப்பதாக சானியா மற்றும் அவரது பெற்றோர் எங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு டெல்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு உட்பட அனைத்து முக்கிய போட்டிகளிலும் இந்தியா சார்பில் பங்கேற்பதை சானியா உறுதி செய்துள்ளார், எனவும் பொதுச் செயலர் அனில் கண்ணா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மலிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தின் பின்னரும் இந்தியா சார்பில் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க இருப்பதாக சானியா தெரிவித்துள்ளார்.
விசா கோரி விண்ணப்பித்திருந்த ஷொய்ப் மலிக் குடும்பத்தாருக்கு இந்தியத் தூதரகம் நேற்று வியாழக்கிழமை விசா வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’