வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

கண்டி மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமோக வெற்றி! ஐ.ம.சு.கூ: 8, ஐ.தே.க.: 4, ஜ.தே.மு.: எதுவுமில்லை!!

கண்டி தேர்தல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகின.

இந்த முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 339,819 வாக்கு களைப் பெற்று எட்டு ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 192,798 வாக்கு களைப்பெற்று நான்கு ஆசனங்களையும் கைப்பற்றின. ஜனநாயக தேசிய முன் னணி 23,728 வாக்குகளைப் பெற்ற போதும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லைஏனைய அரசியற் கட்சிகளும் சுயேச் சைக்குழுக்களும் ஐந்து சதவீதத்துக்கு குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள தால் அவை ஆசனத்தெரிவில் இருந்த நிராகரிக்கப்பட்டன.
இந்த முடிவுகளின் பிரகாரம் விருப்பு வாக்குப் பெற்றவர்கள் விவரம் இன்று நண்பக லுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, நாவ லப்பிட்டிக் தொகுதியில் சில வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்ற தாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு மீள்வாக்குப் பதிவு நேற்று இடம்பெற்றது.
அந்தத் தொகுதியின் முடிவுகளுடன் ஏனைய தொகுதிகளின் முடிவுகளையும் சேர்த்து மாவட்டமட்ட முடிவுகள் இன்று வெளியிடப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’