வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

பஸில், விமல் இரு புதிய முகங்கள் 35 பேர் கொண்ட அமைச்சரவை வெள்ளியன்று பதவியேற்கும் டி. எம். ஜயரட்ண புதிய பிரதமராகிறார்

இலங்கையின் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 35 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சுமார் முப்பத்தைந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் ஆக இரண்டே இரண்டு புதிய முகங்களே இடம்பெறும் என்றும், ஏனைய அமைச்சர்கள் பழைய முகங்களாக இருப்பர் என்றும் கூறப்படுகின்றது. ஆளும் தரப்பில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பஸில் ராஜபக்ஷவும்
கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற விமல் விரவன்ஸவுமே புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்கப் போகின்றவர்கள் என்று அறியப்படுகின்றது.
இந்த இருவரையும் தவிர, ஏனைய அமைச்சர்கள் அனைவரும் முன்னர் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாகவே இருப்பர் என்றும் கூறப்படுகின்றது.
பிரதமர் பதவிக்கு டி.எம்.ஜயரட்ண நியமிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரது சகோதரருமான பஸில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவைக்குள் அதிகப்படியான சில பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
"ஜனாதிபதியின் அலுவலக அமைச்சர்' என்ற கோதாவில் சில அமைச்சர்களை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் வெளிவிவகார விடயங்களையும் கண்காணிக்கும் பொறுப்புகள் பஸிலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் ஒவ்வொரு அமைச்சரின் கீழ் வரும் துறைகளின் விரிவும் பரப்பும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’