வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஏப்ரல், 2010

யுவதியை படுகொலை செய்து 40 பவுண் நகைகள் அபகரிப்பு யாழ்ப்பாணம் அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் வீட்டிலிருந்த இளம் யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்டு 40 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ரவீந்திரதாஸ் கலைச்செல்வி (25 வயது) என்ற யுவதியே படுகொலை செய்யப்பட்டவராவார்.
இந்த யுவதியின் பெற்றோர் அயலிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது அங்கு வந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டில் தனிமையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த யுவதியைக் கூரான ஆயுதத்தினால் தலையில் குத்தியுள்ளனர்.
தலையில் படுகாயமடைந்த அந்த யுவதி மயக்கமுற்று இரத்த வெள்ளத்தில் கிடந்த போது கொள்ளையர்கள் வீடு முழுவதும் தேடி சுமார் 40 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த பெற்றோர் மகள் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவரை உடனடியாக அச்சுவேலி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கையில் இடைவழியில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’