வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு விஷேட பஸ் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடத்த திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விஷேட பஸ் சேவைகளை நடத்த போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகையின் பின்னர் தொழில் நிமித்தம் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வர உள்ளவர்களின் வசதி கருதி நாட்டின் பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி 400 பஸ்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்துச் சபை ஒழுங்கு செய்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற பஸ்களை அப்பிரதேசங்களில் தங்க வைத்து மீண்டும் அந்த பஸ்களை நாளை முதல் கொழும்புக்கான சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஷேட சேவையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’