முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 7802 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 233 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் நூறு சதவீதமான மக்களும் மீளக் குடியமர்ந்து விட்டார்கள். ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பன்னிரண்டு கிராமசேவையாளர் பிரிவு மக்களும் மீளக்குடிய மர்த்தப்பட்டுள்ளனர். இங்கு கண்ணிவெடி அகற்றும் பகுதியில் படையினர் மற்றும் இந்திய நிபுணர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
கண்ணி வெடி அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டதும் அந்தந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள். இதேவேளை கரைத்துறை பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் வற்றாப்பளைக் கிராமத்தில் 519 குடும்பங்களைச்சேர்ந்த 1486 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’