வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

ஆற்றில் வீசியெறியப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.


களுகங்கையில் வீசியெறியப்பட்ட நான்கு வயது குழந்தை ஒன்றை லொறிச் சாரதியொருவர் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று நேற்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி குழந்தை மீட்கப்பட்டு களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மகாநாம ராஜமந்திரி தகவல் தெரிவிக்கையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மூர்ச்சையாகி இருந்ததாக தெரிவித்ததுடன் இதனடிப்படையில் நேற்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் இரத்த ஓட்டம் வழமையான முறைக்கு திரும்பியிருந்ததுடன் நுரையீரலின் செயற்பாடும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சற்று கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தையின் சுகநலம் தற்போது தேறிவருவதாகவும் கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். குழந்தையை களுகங்கையில் வீசியெறிந்தமை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தென் களுத்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் இக்குழந்தையை வீசியெறிந்தமை தொடர்பாக இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’