அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லஸ் நகரத்தில் காந்தி சிலை நிறுவ நகர நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய அமெரிக்கரான பிரசாத் தோடகுரா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் ஒரு லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், மத்தியில் பல்வேறு சமூகத் தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 'இந்திய அமெரிக்க நட்புறவு கவுன்சில்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரசாத்துக்கு, டல்லஸ் நகர நிர்வாகம், காந்தி சிலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"நகர மேயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நீண்டநாள் கனவு" என்றார்.
ஒன்பதடி உயரத்தில் தண்டி யாத்திரையின் போது காந்தி நடந்து செல்வது போன்ற உருவ அமைப்பில் சிலை வடிவமைக்கப்படுகிறது. ஆந்திராவின் பிரபல சிலை வடிவமைப்பாளர் பி.வர பிரசாத் இதனை வடிவமைக்கின்றார். இதன் ஆரம்பக் கட்டப் பணிகளுக்காக ஐந்து லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’