வலிகாமம் மேற்கு பண்டத்தரிப்பு வடலியடைப்பு மோட்டார் சைக்கிளால் மோதுண்ட 4 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற இக்கோர விபத்தில் புவனேந்திரன் றொஷனி என்ற வடலியடைப்பைச் சேர்ந்த 4 வயது சிறுமியே மரணமடைந்தவராவார். அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறுமியை மோதித் தள்ளிய பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மோசமாக காயமடைந்த சிறுமி றொஷானி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது.
விபத்து குறித்து விசாரணை நடாத்தி வரும் வட்டுக்கோட்டை பொலிசார் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஒட்டிகளைத் தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’