எதிர்வரும் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாடு தழுவிய மாநிலத் தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்கள் இருவரும் Seine Saint Denis 93 மாநிலத்தில் பசுமைக்கட்சியின் (Europe-ecologie) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவியும், பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும்,சர்வதேசப் பேச்சாளருமான கிருசாந்தி (சாலினி) சக்திதாசன், Ile Saint Denis மாநகரசபை ஆலேசகராக 2007 தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முருகநாதபிள்ளை ரவிசங்கர் ஆகிய இருவருமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் 9 தமிழர்கள் ஆலோசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’