வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 மார்ச், 2010

டெண்டுல்காருக்கு பாரத ரத்னா விருது -இமாசல பிரதேச முதல்வர் ஆதரவு


இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்காருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இமாசல பிரதேச முதல்வர் பிரேம் குமார் துமால் தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் ராணுவம் அல்லாத இதர துறைகளில் சாதனை செய்யும் சிவிலியன்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்த பட்ச விருது பாரத ரத்னா விருது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை இந்தியாவின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் படைத்து வருகிறார். சாதனைகள் முறியடிப்பதற்கே என்று அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைகுவித்த வீரர்களில் டெண்டுல்கர் முதலிடம் பெறுகிறார். தவிர, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தும் சச்சின் தனது முத்திரையை பதித்து இருக்கிறார்.

சமீபத்தில் இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதன் 2 _ வது போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார்.

இதன் மூலம் 39 வருட கால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமையாகும். இதற்கு முன்னாள்வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். டெண்டுல்காரின் இந்த சாதனையைத் தொடர்ந்து இந்தியாவில் அளிக்கப்படும் உயர்ந்த பட்ச சிவிலிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. முன்னாள்வீரர்கள் பலர் இந்த கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெண்டுல்காரின் சாதனைகளை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இமாசலப் பிரதேச முதல்வரான பிரேம் குமார் துமாலும் இதனை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த 20 ஆண்டு காலமாக டெண்டுல்கார் தனது சாதனைகள் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்காக செய்யப்படும் முயற்சிக்கு நான் முழு ஆதரவை அளிக்கிறேன் என்றும் அவர் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். இடையில் டெண்டுல்கார் மோசமாக ஆடிய கால கட்டத்தில் அவரது ஆட்டம் குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது. அப்போது சச்சின் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி சாதிப்பார் என்றும் முதல்வர் துமால் தெரிவித்தார்.

டெண்டுல்கரை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் இமாசலப் பிரதேச முதல்வர். கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை அவர் ஒரு துருவ நட்சத்திரம் என்றும் இதில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’