வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 மார்ச், 2010

அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தாக்க இனியபாரதி குழு முயற்சி்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரனை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவான (கருணா குழு) இனியபாரதி குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர்

இன்று (சனிக்கிழமை) திருக்கோவில் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபடச் சென்றுகொண்டு இருந்தபோது, இவரையும், இவரது ஆதரவாளர்களையும் வழிமறித்த இனியபாரதி குழுவினர் தாக்குதல் நடத்த முற்பட்ட போதிலும்,
ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்ட ஹென்றி, உறவினர் ஒருவரது வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்தால் அவரையும் படுகொலை செய்து, அவரது ஊர்தியையும் கொழுத்தப் போவதாக தாக்குதல் நடத்த முற்பட்டவர்கள் அச்சுறுத்தல் விடுத்தபோது, மாவை சேனாதிராஜா ஊடாக பொலிஸ் மா அதிபர், மற்றும் அம்பாறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருடன் தொடர்புகொண்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற திருக்கோவில் பொலிஸார் ஹென்றியையும், அவரது ஆதரவாளர்களையும் அக்கரைப்பற்று வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
இது பற்றிக் கருத்துக் கூறிய வேட்பாளர் குலசேகரம் மகேந்திரன், இவ்வாறான  சம்பவங்கள் பல இடம்பெற்று வருவதாகவும், இருப்பினும் துணைப்படைக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றியும், தேர்தல் தொடர்பாகவும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட வந்த தன்னை துணைப்படைக் குழுக்கள் தடை விதித்திருப்பதால், அந்த மக்கள் தேர்தல் ஊடாக துணைப்படைக் குழுக்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உப தலைவர் என்பதுடன், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’