வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 மார்ச், 2010

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஐந்து வருடகால இடைவெளியின் பின்னர் நேற்று வெள்ளிக்கழமை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரியா தலைமையில் தமிழ் பண்பாடுகளுடன் மிகவும் எழுச்சிகரமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக்கழக வேந்தா பேராசிரியர் ம.சிவசூரியா, உப வேந்தா பேராசிரியர் நா.சண்முகலிங்கன் ஆகியோர் குடை ஆலவட்டத்துடன் முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பட்டம் பெறும் மாணவாகள் அணிவகுத்துப் பட்டமளிப்பு விழா நடைபெறும் கைலாசபதி மண்டபத்திற்கு மங்கள் வாத்தியத்துடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2005, 2006, 2007ஆம்ஆண்டுகளில் பயிற்சிநெறிகளை நிறைவு செய்த 3972 பேர் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று ஆரம்பமான இந்நிகழ்வு இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். தினமும் ஐந்து அமர்வுகள் என்ற அடிப்படையில் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெறுகின்றது. இதில் கலாநிதி முதுகலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா எனப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
432 பேர் முதுகலைமாணிப் பட்டத்தையும், 361 பேர் முதுகலைமாணி டிப்ளோமாவையும், 2427 பேர் இளமாணிப் பட்டததையும், 625 பேர் வெளிவாரிப் பட்டத்தையும் 127 பேர் டிப்ளோமாப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’