வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணையாளர் அறிக்கை _

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை குறித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி 800 இற்கும் குறைவான வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளில் 8 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
800 முதல் 1200 வாக்காளர்கள் பதிவாகியுள்ள வாக்குச் சாவடிகளில் 9 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
1200 முதல் 1500 வாக்காளர்கள் பதிவாகியுள்ள வாக்குச் சாவடிகளில் 14 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதுடன் 1500 இற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள பிரதான வாக்குச் சாவடிகளில் 15 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக இந்த விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’